1 Kommentar

சிவனே முதல் யோகி!

இவரை ஏன் முதல் யோகி என்கிறோம்?
ஷிவா என்னும் சொல் பலருக்கு பல அர்த்தங்கள் கொடுப்பதாய் அமைந்துள்ளது. இது பல பரிமாணங்களுக்கு அர்த்தம் தருகின்ற ஓரு வார்த்தை. ஷிவாவை தீவிரமான துறவியாக வர்ணிக்கின்றனர். அவர் விழிப்புணர்வின் உச்சத்தில் இருக்கிறார். அவரை சுந்தரமூர்த்தி என்று வர்ணிக்கும் அதேநேரம் அதிபயங்கரமான பைரவ ரூபியாகவும் வர்ணிக்கின்றனர். இப்படியே வர்ணனைகள் நீண்டு கொண்டே செல்லும்… ஆனால் ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்கு அவர் ஒரு யோகி, வெறும் யோகி மட்டுமல்ல அவர்தான் ஆதியோகி, ஆதிகுரு.

சிவனே முதல் யோகி!
யோகப் பாதையில் சிவனே முதல் யோகி – ஆதியோகி. ஏனென்றால், அவர் எல்லையில்லா தன்மையை உணர்ந்திருந்தார். சிவன் என்றால் ஒன்றும் இல்லாத வெறுமை என்று பொருள். எனவே எல்லையில்லாததையும், ஆதியோகியையும் நாம் ஷிவா என்று அழைக்கிறோம். ஆதியோகி ஒரு மனிதனுக்குள் நிகழக்கூடிய உச்சபட்ச பரிமாணத்தை அடைந்தவுடன் பல பேர் அவரை நோக்கி ஈர்க்கப்பட்டனர். இதில் மிக முக்கியமானவர்கள் சப்தரிஷிகள். இந்த ஞானத்தை ஆதியோகியே இவர்களுக்கு நேரிடையாக வழங்கினார். எனவே, யோகத்தில் அவரை நாம் ஆதியோகி எனக் கொண்டாடுகிறோம்.
உலகிற்கு தேவையான மாற்றம் – ஆதியோகி
நமக்கு அமைதியான உலகம் வேண்டுமென்றால், அமைதியான மனிதர்கள் தேவை. நமக்கு அன்பான உலகம் வேண்டுமென்றால், அன்பான மனிதர்கள் தேவை. நமக்கு புத்திசாலித்தனமான உலகம் வேண்டுமென்றால், இன்னும் புத்திசாலித்தனமான மனிதர்கள் தேவை.
உடன் வாழ விரும்பும் விதமான மனிதர்களை, உலகம் முழுவதும் நாம் பார்க்க விரும்பும் மனிதர்களை, நம் குழந்தைகள் அவர்களுடன் வாழக்கூடிய விதமான மனிதர்களை நாம் உருவாக்க விரும்பினால், அடுத்த 10, 12 ஆண்டுகளில், ஒவ்வொரு குழந்தையும் தன் பத்தாவது வயதைத் தாண்டும்முன் ஏழிலிருந்து பத்து நிமிடங்களாவது கண்மூடி அமர்ந்திருக்கும் விதமான ஏதோவொரு எளிமையான ஆன்மீக செயல்முறையைக் கற்றுகொள்ள வேண்டும், அதற்கான சூழ்நிலையை நாம் உருவாக்கவேண்டும்.

ஆதியோகி – சிவன் யோகத்தின் மூலம்
„ஷிவா“ எனும் வார்த்தைக்கு அர்த்தம் „எது இல்லையோ, அது“. இப்படைப்பின் மூலமும், இப்பிரபஞ்சத்தின் அடிப்படையான அம்சமும், பரந்துவிரிந்த வெறுமைதான். நட்சத்திர மண்டலங்கள் என்பது ஆங்காங்கே நிகழ்ந்திருக்கும் சிற்சிறு தூரல்கள், மற்றது அனைத்தும் பரந்துவிரிந்த வெறுமை மட்டுமே. அனைத்தையும் பெற்றெடுக்கும் கருவறையும் இதுதான், அனைத்தையும் தடம் தெரியாமல் தன்னுள் இழுத்துக் கொள்ளும் வெறுமையும் இதுதான்.
யோகி என்றால் இப்பிரபஞ்சம் முழுவதையும் தன்னுள் ஒரு பாகமாய் உணர்ந்தவர் என்று பொருள். ஒன்றுமற்ற வெறுமைதான் எல்லாவற்றையும் ஏந்த முடியும். எனவே எல்லாவற்றையும் தனக்குள் உள்ளடக்கிவிட்ட ஒரு யோகியை, இப்படைப்பின் மூலமான „ஷிவா“விற்கு சமானம் எனலாம். யோக விஞ்ஞானத்தைத் தோற்றுவித்தவர் அல்லது யோகத்தின் மூலம், ஆதியோகி – சிவன். மனித விழிப்புணர்வை உயர்த்துவதற்குத் தேவையான சக்திவாய்ந்த கருவிகளையும், ஒரு மனிதன் தன் உச்சபட்ச சாத்தியத்தை அடைவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளையும் வழங்கியவர் அவர்.

1 Kommentar auf “சிவனே முதல் யோகி!

  1. Hallo, Namaste!

    ich reise regelmäßig nach Nepal und habe dort Freunde.

    Um die Kultur meiner Freunde zu verstehen, will ich ihr Religion verstehen. Welches Buch, möglichst in deutscher Sprache können Sie mir empfehlen, um Ihre Religion zu verstehen. Ich befürchte, dass die Bücher, die ich aussuchen würde, Ihren Glauben aus dem christlichen Blickwinkel betrachten.

    Mit freundlichen Grüßen,

    R. Merkelbag

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht.