வரலாறு

இந்து சமயத்தில், இவ்வாறு பல கடவுள்கள் வணங்கப்படுவதன் காரணமாக இது ஒரு பலகடவுட் கொள்கை சார்ந்த சமயம் எனக் கூறப்படுவதுண்டு. எனினும், பல இந்து சமய ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஒரே கடவுளின் பல்வேறு அம்சங்களே பல கடவுள்களாக வணங்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்து சமயத்துக்கு அடிப்படையானவையாகக் கருதப்படும் நான்கு வேதங்களில் மிகப் பழமையான ரிக் வேதத்திலிருந்தே இதற்கு சான்றுகள் காட்டப்படுகின்றன.